fbpx
Homeபிற செய்திகள்தஞ்சாவூர் கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பாக ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா

தஞ்சாவூர் கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பாக ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா

தஞ்சாவூர் கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில், ஆசிரியர் தின விழா தஞ்சை மாவட்ட ரெட்கிராஸ் அரங்கத்தில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா தலைவர் ஏ.கலையரசன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி மாவட்ட முன்னாள் ஆளுநர். என்.மணிமாறன் சிறப்புரையாற்றினார்.

மண்டலம் 22 உதவி ஆளுநர் எஸ்.கதிரவன், மாவட்ட பில்டர்ஸ் அவார்டு திட்டகுழு தலைவர் டி.மிசால்தாஸ், மூத்த உறுப்பினர் துரைராஜ், பொன்னாப்பூர் மேற்கு துவக்கபள்ளி ..தலைமை ஆசிரியர். சாரதா பத்மினி, ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார்கள்.

இந்த விழாவில். தஞ்சாவூர் கிழக்கு ரோட்டரி சங்கத்தின் சாசன தலைவர் ஏ.அபுபக்கர் சித்திக், முன்னால் தலைவர், எம்.சம்சு கமருதீன், செயலாளர் ஸ்ரீநாத், பொருளாளர் எம்.சதீஷ்குமார், தேர்வு தலைவர் எஸ்.கே.சிதம்பரம் மற்றும் எஸ்.அருண்குமார், ஆர்.திருமூர்த்தி, எஸ்.ஸ்டாலின், எம்.சரவணகுமார். ஜே.நாராயணசாமி, ஜி.ஜி.மணி என்கிற பிரபாகரன், விக்னேஷ்வரன், தேவேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ரோட்டரி மாவட்ட சுயம்வரம் திட்ட குழு தலைவர். கோவி. மோகன் வரவேற்றார். முன்னாள் தலைவர் நா.சுரேஷ் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img