ராணிப்பேட்டை மாவட்டம் பன்னியூர் -பனப்பாக்கம் சாலை யில் காவேரிப்பாக்கம் ஏரியின் மதகு உபரிநீர் கால்வாய் குறுக்கே நெடுஞ்சாலைத்துறை, நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் அலகு சார்பில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட உயர்மட்டபாலத்தினை கைத் தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை யில் பொதுப்பணிகள், நெடுஞ் சாலைகள் மற்றும் சிறுதுறை முகங் கள் துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அரக் கோணம் எம். பி. எஸ்.ஜெகத்ரட்சகன், அரசு செயலாளர், நெடுஞ்சாலை கள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மரு.இரா.செல்வராஜ், மாவட்ட கலெக்டர் ஜெ.யு. சந்திரகலா சோளிங்கர் எம்.எல்.ஏ. முனிரத்தினம், தலைமைப் பொறியாளர் கள் முனைவர்.ஆர். கிருஷ்ணசாமி (நெடுஞ்சாலை திட்டங்கள்), செந்தில், நபார்டு (ம) கிராமச்சாலைகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



