fbpx
Homeபிற செய்திகள்சேலத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு

சேலத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், கருக்கல்வாடி, கிருஷ்ணம் புதூர் கே.கே.எம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந் தாதேவி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்கள்.
பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சரால் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் 15.07.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

உங்களுடன் ஸ்டா லின் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 15.07.2025 அன்று முதல் வரும் நவம்பர் மாதம் வரை நகர்ப்புறப்பகுதிகளில் 168 முகாம்களும் மற்றும் ஊரகப் பகுதிகளில் 264 முகாம்களும் என மொத்தம் 432 சிறப்பு முகாம்கள் திட்டமிடப்பட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தீர்வுகள் காணப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் 15.07.2025 முதல் 30.08.2025 வரை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 79,516 கோரிக்கை மனுக் கள் பெறப்பட்டுள்ளன. இதுதவிர கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கோரிக்கை விண்ணப்பமாக மொத்தம் 89,718 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, நேற்று (02.09.2025) சேலம் மாநகராட்சி, சூரமங்கலம் மண்டலம் வார்டு – 22 பகுதிக்கு உட்பட்டவர்களுக்கு சிவதாபுரம் கந்தசாமி கவுண்டர் திருமண மண்டபத்திலும், நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சி, கருக்கல்வாடி பகுதிக்கு உட்பட்டவர்களுக்கு கிருஷ்ணம்புதூர் கே.கே.எம் திருமண மண்டபத்திலும், சங்ககிரி நகராட்சி வார்டு-6, 7, 12, 13க் குட்பட்ட பகுதிகளுக்கு சங்ககிரி சந்தைப்பேட்டை, வார்டு -2, சமுதாய கூடத்திலும், நங்க வள்ளி பேரூராட்சி வார்டு 1, 2, 3, 4, 5, 6, 7க்குட்பட்ட பகுதிகளுக்கு நங்கவள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில் வார்டு – 14, எம்.என்.வி திருமண மண்டபத்திலும், வீர பாண்டி ஊராட்சி ஒன்றியம், வேம்படி தாளம் பகுதிக்கு வேம்படிதாளம் ஏ.வி.எம் திருமண மண்டபத்திலும், தலைவாசல் ஊராட்சி ஒன்றியம், மணிவிழுந்தான் பகுதிக்கு ராமா னுஜபுரம் சமுதாய கூடத்திலும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது.

அந்தவகையில் நேற்று (02.09.2025) சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், கருக்கல்வாடி, கிருஷ்ணம்புதூர் கே.கே.எம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, முகாமில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள், இருக்கை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வின் போது, ஓமலூர் வட்டாட்சியர் ரவிக்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img