இந்துஸ்தான் கல்வி நிறுவனம் தனது ஈங்கூர் பெருந்துறையில் இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியை அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் தொடங்கியுள்ளது.
முதலாமாண்டு பட்ட வகுப்பு தொடக்க விழா வியாழனன்று நடைபெற்றது. நான்கு பாடப்பிரிவுகள் தொழில்துறை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கலந்தாய்வில் முதலாமாண்டு பொறியியல் இருக்கைகள் முழுமையாக நிரம்பியுள்ளன. அரசு உதவித்தொகை தவிர கூடுதலாக பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாணவர்களுக்கு கல்லூரி அறக்கட்டளை சிறப்பு உதவித்தொகை வழங்குகிறது.
இந்நிகழ்வில் எழுத்தாளர் ஈரோடு கதிர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு கொங்குமாமணி சரசுவதி கண்ணையன் மற்றும் செயலாளர்கள் பிரியா,யமுனா கல்லூரி முதல்வர் ரமேஷ்குமார், இந்துஸ்தான் கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் ராமன், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



