fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியை துவக்கிய கலெக்டர்

கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியை துவக்கிய கலெக்டர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2025-2026-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, 2025-2026ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் குமார் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2025-2026ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் துவங்கப்பட்டுள்ளது.

இப்போட்டிகள் இன்று முதல் 12.09.2025 வரை பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், பொது மக்கள் என ஐந்து பிரிவுகளில் 37 விளையாட்டுகள் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.3000 -மும், இரண்டாம் பரிசாக ரூ.2000 -மும், மூன்றாம் பரிசாக ரூ.1000 வழங்கப்பட உள்ளது.

தனிநபர் போட்டிகளில் முதல் இடங்களை பிடிக்கும் வீரர் வீராங்கனைகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு அரசு செலவில் அழைத்து செல்லப்படுவார்கள்.

இன்று, கல்லூரி மற்றும் பொதுப் பிரிவு பெண்களுக்கான தடகளம், கூடைப்பந்து, கிரிக்கெட், வாலிபால், ஹேண்பால், நீச்சல், ஹாக்கி, கபாடி மற்றும் மேசைப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இதில் 1,542 மாணவிகள், 342 பொதுப்பிரிவு பெண்கள் என மொத்தம் 1,884 நபர்கள் கலந்து கொண்டனர்.

எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணாக்கர்கள், கல்லூரி மாணாக்கர்கள், பொதுப் பிரிவினர், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆகியோர் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி களில் பங்குபெற்று, மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், துணை காவல் கண்காணிப்பாளர் முரளி, கிருஷ்ணகிரி நகரமன்ற தலைவர் பரிதா நவாப், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜ கோபால், வட்டாட்சியர் சின்னசாமி, தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மைத் துறை) வெங்கடேசன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் அஸ்லாம் மற்றும் போட்டி பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img