fbpx
Homeபிற செய்திகள்அடிசியா நிறுவனத்தால் நிறுவப்பட்டது: காளப்பட்டியில் ஜல்லிக்கட்டு சிலை- மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

அடிசியா நிறுவனத்தால் நிறுவப்பட்டது: காளப்பட்டியில் ஜல்லிக்கட்டு சிலை- மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

கோவை காளப்பட்டி பகுதியில் அடிசியா நிறுவனம் சார்பில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு சிலையை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

கோவை காளப்பட்டி ரவுண்டானா பகுதியில் அடிசியா நிறுவனம் சார்பில் ஜல்லிக்கட்டு காளையை வீரர் அடக்குவது போன்ற பிரம்மாண்ட சிலை நிறுவப் பட்டுள்ளது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகி யோர் திறந்து வைத்தனர்.


இந்த நிகழ்வில் அடிசியா நிர்வாக இயக்குனர் எம்.வி. மணிகண்டன் உட்பட அந்நிறுவனத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

கோவையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்காற்றி வருவதாகவும் தொடர்ந்து பங்காற்றுவோம் என்றும் தெரிவித்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எம்.வி.மணிகண்டன் தொடர்ந்து திருச்சி மாவட்டத்திலும் இது போன்ற பணிகளை முன்னெடுத்துள்ளோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img