யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கிருஷ்ணகிரி கோ-ஆபரேட்டிவ் காலனி கிளை, ஓம் சக்தி மருத்துவமனை இரண்டாவது தெருவிலிருந்து ஏகேஆர் காம்ப்ளக்ஸ் நெ.2, முதலாவது தெரு கோ ஆபரேட்டிவ் காலனி, கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய கிளையை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் சென்னை மண்டலத் தலைவர் மற்றும் பொது மேலாளர் சத்திய பான் பெகரா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி மத்திய பட்டுத் துறை ஆராய்ச்சி விரிவாக்க மைய விஞ்ஞானி டாக்டர் முத்தன்ன கல்லூர், பாதுகாப்பு பெட்டக அறையை திறந்து வைத்தார். மூத்த வாடிக்கையாளர் ராம கிருஷ்ணன், தானியங்கி பணம் வழங்கும் இயந்திர அறையை (ஏடிஎம்) திறந்து வைத்தார். கிளை தலைவர் தனிஷ் வரவேற்று பேசினார்.
விழாவில் வங்கியின் துணை பொது மேலாளரும் பிராந்திய தலைவருமான பி.எம்.செந்தில்குமார் பேசும்போது, `வங்கி வழங்கும் பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி முன்னேற வேண்டும்.
வங்கியின் சேவைகள் இன்னும் பல்வேறு தரப்பினரை சென்றடைய வேண்டும். அதற்கு வாடிக்கையாளர் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்` என்றார்.
தொடர்ந்து பல வாடிக்கையாளர்கள் வங்கியினுடைய சேவைகளை பாராட்டி பேசினார்கள். முடிவில் நித்திய கல்யாணி நன்றி கூறினார்.



