fbpx
Homeபிற செய்திகள்விநாயகர் சதுர்த்தி விழா அன்னதானத்தை அமைச்சர் ஜீதா ஜீவன் தொடங்கிவைத்தார்

விநாயகர் சதுர்த்தி விழா அன்னதானத்தை அமைச்சர் ஜீதா ஜீவன் தொடங்கிவைத்தார்

தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையத்தில் வீற்றிருக்கும் போல்பேட்டை அருள்மிகு போத்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழாவில் சிறப்பு அலங்காரம், மஹா அபிஷேகம், தீபாராதனை வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழாவில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, தர்மகர்த்தா ராஜா பெரியசாமி, தொழிலதிபர் அசோக் பெரியசாமி ஆகியோர் பொதுமக்களோடு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் நடைபெற்ற அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

கோவில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முத்துச்செல்வம், கீதா முருகேசன், மண்டலத்தலைவர் அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர் கவுன்சிலர் ஜாக்குலின் ஜெயா, பெருமாள்கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img