கடலூர் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி.பேராக் ஒகினாவா கோஜி ரியோ கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி மற்றும் பெல்ட் சான்றிதழ் வழங்கும் விழா வடலூர் சேராகுப்பத்தில் உள்ள எஸ்.டி.சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் முதல்வர் மற்றும் இயக்குனர் இவன்ஸ் பிரவீன் தலைமை தாங்கினார்.
விழாவிற்கு ஆர்.ஷர்மா, மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சத்யராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கராத்தே பயிற்சி பள்ளி நிறுவனர் சென்சாய் வி.ரங்கநாதன் அனைவரையும் வரவேற்றார்.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார். பா.ம.க. வடக்கு மாவட்ட செயலாளர் கோ.ஜெகன், எஸ்.டி.சீயோன் மெட்ரிக் பள்ளி தாளாளர் சாமுவேல் பிரவீன், சமூக ஆர்வலர் வி.பஞ்சமின், எஸ்.எஸ்.கே.உரிமையாளர் சீனிவாசன் ஆகியோர் பரிசு, சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.
இப்போட்டியில் சிதம்பரம், புவனகிரி, கடலூர், பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம், ஆண்டிமடம், சேத்தியாதோப்பு பரங்கிப்பேட்டை, வடலூர், விருத்தாச்சலம், காட்டுமன்னார்கோவில். மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் பங்கு பெற்றனர்.
இப்போட்டி கட்டா பிரிவு மற்றும் சாய் பிரிவுகளில் நடைபெற்றது போட்டியில் பயிற்சியாளர் எம்.இளவரசன், பி.சத்யராஜ், டி.பிரிதி, சத்தியமூர்த்தி, ரவிக்குமார் மற்றும் ஆசிரியை அன்பு ராணி, உடற்கல்வி ஆசிரியர் சத்தியா, ராசாத்தி, மணிகண்டன், அன்வர் ஆகியோர் பங்கு பெற்றனர். விழா முடிவில் ஆர்.ஷர்மா நன்றி கூறினார்.



