டால்பி லேபரட்டரீஸ் இன்க் இந்தியாவின் முன்னணி எஸ்யூவி உற்பத்தியாளரான மஹிந்திரா – மஹிந்திரா லிமிடெட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் மஹிந்திராவின் வேரியன்ட்டுக்கு டால்பி அட்மோஸை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (XUV 3XO) உடன் தொடங்கி, மேலும் அணுகக்கூடிய கார்களில் ஆடியோ பொழுதுபோக்கு அனுபவத்தை மறுவரையறை செய்யும்.
இதன் மூலம் மஹிந்திராவின் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ஆர்இவிஎக்ஸ் ஏ (XUV 3XO REVX A) வேரியன்ட், ரூ.12 லட்சத்திற்கும் குறைவான (எக்ஸ்-ஷோரூம்) டால்பி அட்மோஸைக் கொண்ட உலகின் முதல் எஸ்யூவி ஆகும்.
முதன்முதலில் சினிமாவிற்காகவே உருவாக்கப்பட்ட டால்பி அட்மாஸ், கலை வெளிப்பாட்டை அதன் முழுத் திறனிலும் வழங்கும் பொழுதுபோக்குகளை உருவாக்கி அனுபவிப்பதற்கான ஒரு புதிய வழியாகும்.
ஆர்இவிஎக்ஸ் ஏ (REVX A) உடன் கூடுதலாக, டால்பி அட்மாஸ் ஏஎக்ஸ்5எல், ஏஎக்ஸ்7, ஏஎக்ஸ்7எல் வேரியன்டுகளிலும் கிடைக்கும். இந்த சிஸ்டம் ஆறு ஸ்பீக்கர் ஆடியோ அமைப்பைக் கொண்டுள்ளது.
மஹிந்திரா – மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிசினஸ் (டெசிக்னேட்) தலைவர் ஆர். வேலுச்சாமி கூறுகையில், “எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (XUV 3XO) உடன், ரூ.12 லட்சத்திற்கும் குறைவான எஸ்யூவி – எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ஆர்இவிஎக்ஸ் ஏ (XUV 3XO REVX A) உடன் தொடங்கி டால்பி அட்மாஸை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை அமைப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்“ என்றார்.
டால்பி லேபோரட்ரீஸ் வணிக கூட்டாண்மைகள்-ஐஎம்இஏ-இன் மூத்த இயக்குநர் கரண் குரோவர் கூறுகையில், “ கேபினில் உள்ள பொழுதுபோக்கின் எல்லைகளைத் தாண்டி, அற்புதமான அனுபவத்தை அதிகமான நுகர்வோருக்கு வழங்குவது எங்கள் பய ணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தருணம் ஆகும்“ என்றார்.
3எக்ஸ்ஓ இப்போது டால்பி அட்மாஸைக் கொண்ட நான்காவது மஹிந்திரா வாகன சீரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.



