கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், பாலாஜி நகர், தனலட்சுமி நகர் பகுதியில் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவை கோவை மாநகர் மாவட்ட திமுக, பாப்பநாயக்கன்பாளையம் பகுதி திமுக, எஸ்.என்.ஆர். சேரிடபிள் டிரஸ்ட், பாலாஜி நகர், தனலட்சுமி நகர் நலச்சங்கம் ஆகியவை இணைந்து நடத்தின. பூங்காவை எஸ்.என்.ஆர். சன்ஸ் சேரிடபிள் டிரஸ்ட் மேனேஜிங் டிர ஸ்டி ஆர்.சுந்தர் திறந்து வைத்தார்.

நிகழ்வில் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ). எஸ்.என்.ஆர். சேரிடபிள் டிரஸ்டி, முன்னாள் கோவை மாநகராட்சி மேயர் வி.கோபாலகிருஷ்ணன், மாநகராட்சி மத்திய மண்டலத் தலைவர் மீனாலோகு, எஸ்.என்.ஆர். சேரிடபிள் டிரஸ்ட் ஏ.ஓ.மகேஷ் குமார், ரேஸ் கோர்ஸ் காவல்நிலைய ஆய்வாளர் கந்தசாமி, மத்திய மண்டலம் ஏஇஇ ஹேமலதா, பாப்பநாயக் கன்பாளையம் பகுதி திமுக பொறுப்பாளர் மா.நாக ராஜ், 48 வது வட்ட திமுக செயலாளர் மு.சசிகுமார், மாமன்ற உறுப்பினர் பிரபாவதி, கேபிள் ராஜேந்திரன், வ.விஜய், தம்பு, காளிதாஸ், கேபிள் சேகர், சிபிஐ ரவி மற்றும் திமுக நிர்வாகிகள், நகர் நலச் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.



