கோவையில் ஜிவாந்தா என்ற பெயரில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சொகுசு வில்லாக் களை மகேஷ்வரி டெவ லப்பர்ஸ் அறிமுகம் செய் துள்ளது. அதற்கான துவக்க விழா நடைபெற்றது.
ஜிவாந்தா, சரவணம் பட்டி மேம்பாலம் அருகே செட்டி தோட்டத்தில், விரைவில் அமையவிருக்கும் மெட்ரோ ரெயில் வழித் தடத்திற்கு அருகே அமைந்துள்ளது. மேலும், இதனைச் சுற்றி பிரபல பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஐடி அலுவலகங்கள், மால்கள் மற்றும் ஓட் டல்கள் ஆகியவை அமைந் துள்ளதால், முதலீட்டா ளர்கள், ஐடி நிறுவன ஊழியர்கள் மற்றும் குடும் பங்களுக்கு ஏற்ற இடமாக இது இருக்கும்.
இந்த முழுமையான தானியக்க வில்லாக்களை நல்லறம் அறக்கட்டளை தலைவரும் சிறப்பு விருந்தின ருமான அன்பரசன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. அருண்குமார், செல்வம் ஏஜென்சீஸ் நிர்வாக இயக்குனர் நந்த குமார், இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையின் தலைவரும் ஸ்ரீவாரி பைனான்ஸ் அன்ட் லீசிங் கம்பெனியின் இயக்கு னருமான ராஜேஷ் பி லுன்ட், அகில இந்திய பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவரும் டெக்கான் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக பங்குதாரருமான கார்த்திக், கிரெடாய் கோயம்புத்தூர் தலைவர் அரவிந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து மகேஷ் வரி டெவலப்பர்ஸ் நிறு வனத்தின் தலைமை செயல் பாட்டு அதிகாரி நிதின் கார்த்திக் கூறுகையில், “இந்தியாவின் முதல் முழு மையான தானியங்கி வில்லாக்களுடன், மகேஷ் வரி டெவலப்பர்ஸ் சர் வதேச தரங்களுக்கு இணையான முன்னோடி மற்றும் சமீபத்திய தொழில் நுட்பத்தைக் கொண்டு வருகிறது” என்றார்.
மகேஷ்வரி குழும நிறுவனர் மற்றும் தலைவர் கார்த்திக் சுந்தரசாமி கூறுகையில், “மகேஷ்வரி டெவலப்பர்ஸ், மக்களின் பல்வேறு தேவைகளை மனதில் கொண்டு சிறப்பாக
ஜிவாந்தாவை வடிவமைத்துள்ளது” என்றார்.



