இந்திய அதிகாரிகள் சங்கம் – கோவை மண்டலம் சார்பில், ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையுடன் இணைந்து, சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களது துணைவியருக்காக மாஸ்டர் ஹெல்த் செக்-அப் (முழுமையான சுகாதார பரிசோதனை) சிறப்பு முகாம் கடந்த ஒரு மாதமாக நடத்தப்பட்டது. இதில் சுமார் 250 உறுப்பினர்கள் மற்றும் அவர்களது துணைவியர் பரிசோதனை செய்து கொண்டனர்.
இந்த முகாமின் நிறைவு விழா ராயல் கேர் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவர் பி.ஆர்.சம்பத், துணைத் தலைவர்கள் எஸ்.ரத்தின சபாபதி, ஏ.வீரபாண்டியன், பொதுச் செயலாளர் ஆர்.மூர்த்தி, துணைச் செயலாளர் டி.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.துரை மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு, மருத்துவமனை வழங்கிய சிறப்பான சேவைக்கு நன்றி தெரிவித்தனர்.
ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.மாதேஸ்வரன், மாஸ்டர் ஹெல்த் சென்டர் ஆலோசகர் மருத்துவர்கள் டாக்டர் ஜனார்த்தனன், டாக்டர் சசிகலா, தலைமை செயல் அதிகாரி டாக்டர் கே.டி.மணி செந்தில்குமார் மற்றும் மருத்துவ இயக்குநர் டாக்டர் பரந்தாமன் சேதுபதி ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்து முகாமை வெற்றிகரமாக நடத்தியதற்காக சங்க அலுவலர்களால் பாராட்டப்பட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை சங்க மூலக்குழு உறுப்பினர்கள் வெள்ளியங்கிரி (இன்ஜினியர்), கிருஷ்ணகுமார் (ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை இன்ஜினியர்), உதயகுமார் (ஓய்வுபெற்ற ஆர்.டி.ஓ), குமாரசாமி (உதவி ஆணையர் – காவல்துறை) ஆகியோர் முன் னின்று செய்திருந்தனர். முடிவில் இம்முகாமை தொடங்கித் திட்டமிட்டு, வெற்றிகரமாக நடத்தக் காரணமாக இருந்த சங்க மூலக்குழு உறுப்பினர் வெள்ளியங்கிரி நன்றி கூறினார்.



