fbpx
Homeபிற செய்திகள்ராணிப்பேட்டை மக்கள்குறைதீர் கூட்டத்தில் 337 மனுக்கள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் சந்திரகலா உத்தரவு

ராணிப்பேட்டை மக்கள்குறைதீர் கூட்டத்தில் 337 மனுக்கள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் சந்திரகலா உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மைத்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, கூட்டுறவு. மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த 337 மனுக்களை பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி களிடம் இருந்து பெற்றுக் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்கள் நலவாரியம், தாட்கோ சார்பில் விபத்தில் காயமடைந்த 3 நபர்கள் மற்றும் இயற்கை மரணமடைந்த 1 தூய்மைப் பணியாளரின் வாரிசுதாரர் என 4 பயனாளிகளுக்கு ரூ.2.70 இலட்சம் மதிப்பீட்டில் நிவாரண நிதி யுதவி வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை சரண்யா தேவி. நேர்முக உதவியாளர் ஏகாம்பரம் (பொறுப்பு), தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு.திட்டம் கீதாலட்சுமி, உதவி ஆணையர் (கலால்) ராஜ்குமார், நேர்முக உதவியாளர் (நிலம்) ரமேஷ், தாட்கோ மேலாளர் அமுதாராஜ், மாவட்ட மாற்றுத்திறனா ளிகள் நல அலுவலர் வசந்த ராமகு மார் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img