fbpx
Homeபிற செய்திகள்150 கிராமங்களில் நூலக கழகத்தை அறிமுகம் செய்த கடலூர் ஆட்சியர்

150 கிராமங்களில் நூலக கழகத்தை அறிமுகம் செய்த கடலூர் ஆட்சியர்

கடலூர் மாவட்டத்தில் 150 கிராமங்களில் நூலக கழகம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், அன்னவல்லி ஊராட்சி யில் கிராமப்புற நூலகங் களின் மூலமாக பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்திட ‘வாசிப் போம் உயர்வோம்‘ திட்டம் துவக்கவிழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, வாசிப்போம் உயர்வோம்‘ திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து கலெக்டர் கூறியதாவது:

பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகளிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை தூண்டும் விதமாகவும், அறிவார்ந்த சமுதாயம் உருவாகிட வேண்டும் என்பதற்காகவும் கிராமப்புற நூலகங்களின் மூலமாக வாசிப்போம் உயர்வோம் என்ற திட்டம் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் கிட்டத்தட்ட 150 கிராமங்களில், மாவட் டத்தின் முன்னெடுப்பு முயற்சியாக கிராம நூலகக் கழகம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த குடி யிருப்புகளில் கிட்டத்தட்ட 5,146 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பெற்றோர்களிடம் அனுமதி பெற்று 4,544 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இக்கல்வியாண்டில் சுதந்திர தினத்தையொட்டி “வாசிப்போம் உயர்வோம்“ திட்டம் அன்னவல்லி கிராமத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 4 முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் திங்கள் மற்றும் புதன்கிழமை ஒருபகுதி யினரும், செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் மற்றொரு பகுதியினரும் இரண்டு தொகுதிகளாக ஒரு மணி நேரம் நூலகத்திற்கு சென்று புத்தகங்களை வாசிப்பார்கள்.
இதன்மூலம் மாணவர் கள் செல்போனில் நேரத்தை செலவிடுவதை தவிர்த்து நல்ல புத்தகங்களை படிக்க இயலும். 54 கதைப் புத்தகங்கள் கிராமப் புற நூலகத்தில் இடம் பெற்றுள்ளது. ஆரம்பத்தில் இந்த கதைப் புத்தகத்தை இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்கள் வாசித்து காண்பிப்பார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்தார்.
இதில் ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் பிரியங்கா, பயிற்சி கலெக்டர் மாலதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஷபானா அஞ்சும் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img