திருப்பூர் மாவட்ட சதுரங்க சர்க்கிள், தி ஃப்ரண்ட்லைன் பள்ளி மற்றும் ரோட்டரி கிளப் திருப்பூர் இணைந்து முதலாம் ஆண்டு சதுரங்கப் போட்டி திருப்பூர் மாவட்ட சதுரங்க சர்க்கிள், ஃப்ரண்ட்லைன் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் இணைந்து முதலாம்ஆண்டு சதுரங்கப் போட்டியை பள்ளி வளாகத்தில் கடந்த 17ம் தேதி நடத்தியது.
இதில் காங்கேயம், உடுமலை, தாராபுரம், அவிநாசி, பல்லடம் ஆகிய இடங்களில் இருந்து 325 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி யின் தாளாளர் டாக்டர் சிவசாமி, திருப்பூர் மாவட்ட சதுரங்க சர்க்கிள் தலைவர் சக்தி நந்தன், செயலாளர் வி.உமாபதி, பொருளாளர் ஹேமலதா, பள்ளியின் இணைச் செயலாளர் வைஷ்ணவி நந்தன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தனர்.
ஏழு சுற்றுகளாக போட்டி கள் நடைபெற்றது. 9, 12, 16 வயதுக்குட்பட்டோருக்கு தனித்தனி பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற 120 மாணவர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப் பட்டன. பொது பிரிவில் மொத்தம் 15 பரிசுகள் மற்றும் 13600 ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. பொது பிரிவில் முதல் பரிசு (ரூ.3000)- கோகுல கிருஷ்ணனுக்கும் இரண்டாம் பரிசு (ரூ.2000)- கிஷோருக்கும் மூன்றாம் பரிசு -(ரூ.1500) சூரிய நாராயணனுக்கும் கிடைத்தனர். -9 – வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் முதல் பரிசை- விசாகனும் இரண்டாம் பரிசை – தமிழ்இன்பக்குமரனும் மூன் றாம் பரிசை – தமிழினியனும் வென்று முறையே ரூ.1000, ரூ.750, ரூ.500 பெற்றனர்.
-9 – வயதிற்குட்பட்ட மாணவியர் பிரிவில்- லட்சுமி தேவி, இளமதி, சிரோஸ்ரீ நந்தன் ஆகியோர் -12 – வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் தேவதருண்கி, தக் ஷண்ரி, ஆதிலேஷ் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்து ரூ.1000, ரூ.750, ரூ.500 என பெற்றனர்.
-12 – வயதிற்குட்பட்ட மாணவியர் பிரிவில்- சுதர்சனா, மாலதி,- நிரஞ்சனா ஆகியோரும் -16 – வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் க்ரிதார்த்,- அபினேஷ், உதய கார்த்திபன் ஆகியோரும் -16 – வயதிற்குட்பட்ட மாணவியர் பிரிவில் ராஜேஸ்வரி, ஹாசினி, சௌமியா தேவி ஆகியோரும் முதல் மூன்று இடங்களைப் பிடித்து ரூ.1000, ரூ.750, ரூ.500 என பரிசுத் தொகையை வென்றனர்.
நிகழ்வில் திருப்பூர் மாவட்ட இளையர் சதுரங்க மாணவர்களான யாழிசை, மகதி, கோகுல் கிருஷ்ணன் ஆகியோர் தமிழ்நாடு அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றதற்காக பாராட்டி சிறப்பிக்கப்பட்டனர். மேலும் கோகுல் கிருஷ்ணன், கவின் ஆகியோர் ஒரே சமயத்தில் 60 பேருடன் சதுரங்கப் போட்டியில் விளையாடிஅசத்தினர். வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் 60வது வார்டு மாமன்ற உறுப்பினரான கோமதிகுமார், திருப்பூர் மாவட்ட சதுரங்க சர்க்கிள் தலைவர் சக்தி நந்தன், செயலாளர் வி.உமாபதி, பொருளாளர் ஹேமலதா மற்றும் பள்ளியின் தாளாளர் டாக்டர் சிவசாமி, பள்ளியின் இணைச் செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் திருப்பூர் ரோட்டரி கிளப் தலைவர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினர்.



