fbpx
Homeபிற செய்திகள்கோவை நடன விழாவில் பங்கேற்ற வெளிநாட்டு பரதநாட்டிய மாணவிகள்

கோவை நடன விழாவில் பங்கேற்ற வெளிநாட்டு பரதநாட்டிய மாணவிகள்

கோவை அவிநாசி சாலையில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குளோபல் ஆர்ட்ஸ் அகாடமி UK மற்றும் குளோபல் ஆர்ட்ஸ் அகாடமி டான்ஸ் அண்ட் மியூசிக்கல் திருவிழா – 2025 நடைபெற்றது.

இதில் பல்வேறு நாடுகளில் இருந்து பரதநாட்டிய மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீலங்கா, இந்தியா, டோகா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பரதநாட்டிய மாணவிகள் மற்றும் தமிழகத்தைச் சார்ந்த 700 பேர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கு கொண்ட மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து பிரதீப் குமார் கூறும் போது பரதநாட்டியத்தை பொறுத்தவரை உலக அளவில் மிகப்பெரிய கலையாகவும் அதிக மாணவிகள் இந்த கலைகளை ஆர்வமுடன் கற்று வருவதாகவும் தெரிவித்தார் மேலை நாடுகளில் பரதநாட்டியத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img