திருப்பூர் மாவட்ட குத்து சண்டை கழகத்தில் டி.ஜே பாக்ஸிங் கிளப் பதிவு செய்யப்பட்ட விழா மற்றும் தேசிய,மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்ற குழந்தை செல்வங்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களும் கோப்பைகள் வழங்கும் விழாவும் ரங்கநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை தலைவர் ஆதிலட்சுமி, துணைத் தலைவர் சௌமியா, செயலாளர் தரணி, பொருளாளர் சரண்யா ஆகியோர் செய்திருந்தனர்.
சிறப்பு அழைப்பாளராக திருப்பூர் மாவட்ட பாக்சிங் அசோசியேசன் தலைவர் கார்த்திகேயன், பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன், ஹெவன் இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர் கார்த்திக், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் முத்துக் குமார், பயிற்சியாளர் வெங்கடேஸ்வரன், மற்றும் முன்னாள் பாக்ஸர்கள். பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.



