சென்னை மாநகரின் பிரபல மருத்துவமனை யான ரேலா மருத்துவ மனை ஆகஸ்ட் 13 அன்று ஒவ் வொரு ஆண்டும் அனு சரிக்கப்படும் உலக உறுப்பு தானத்தை கொண்டாடும் விதத்தில் ஒரு விழிப்புணர்வு நடைப்பயணத்தை (வாக்கத்தான்) நடத்தியது. கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உட்பட 400க்கும் கூடுதலான நபர்கள் இந்நிகழ்வில் உற் சாகத் தோடு பங்கேற்றனர்.

உறுப்புதானம் மீதான செய்தியை வலுவாக மக்களிடையே கொண்டு போய் சேர்ப்பதும் உறுப்பு தானம் வழங்க உயி ரோடு இருக்கும்போதே வாக்குறுதிகளை வழங்க ஊக்குவிப்பதும் இந்த நிகழ்வின் நோக்கமாகும். உறுப்புதானத்தின் மூலம் வாழ்க்கையின் இரண்டா வது அத்தியாயத்தை தொடங்க பல நோயாளிகளுக்கு நம்மால் உதவ முடியும். ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்துகிற சமூக செயல்பாட்டின் மீது அர்ப்பணிப்பை வெளிப் படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த 5 கிமீ தூர வாக்கத்தான், ரேலா மருத்துவமனையிலிருந்து தொடங்கி தாம்பரத்திலுள்ள மெட்ராஸ் எக்ஸ்போர்ட் பிராசஸிங் ஸோன் (மெப்ஸ்) வரை நடைபெற்றது.
தாம்பரம் காவல்துறை ஆணையரகத்தின் துணை ஆணையர் (போக்குவரத்து) சமாய் சிங் மீனா, ரேலா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் கௌதமன் மற்றும் தலைமை இயக்க அதிகாரி முகமது ஃபரூக் ஆகியோருடன் இணைந்து இந்நிகழ்வை கொடிய சைத்து தொடங்கி வைத் தார். உறுப்புமாற்று நுரையீ ரலியல் துறையின் கிளினிக்கல் லீடு டாக்டர். ஐஸ் வர்யா ராஜ்குமார் உட்பட ரேலா மருத்துவமனையின் உறுப்புமாற்று சிகிச்சை பிரிவின் மூத்த நிபுணர்கள் இத்தொடக்க விழா நிகழ்வில் கலந்து கொண்டனர். உறுப்புதா னம் மீது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கவும், தெளிவான விளக்கத்தை வழங்கவும் இந்நிகழ்வின் பங்கேற்பாளர் களோடு மருத்துவர்களும், மருத்துவமனை பணியாளர்களும் ஆர்வத்தோடு ஈடுபட்டனர்.



