fbpx
Homeபிற செய்திகள்முக சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து காவேரி மருத்துவமனை சாதனை

முக சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து காவேரி மருத்துவமனை சாதனை

ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின் நிபுணர்கள், கடுமையான முக சிதைவால் பாதிக் கப்பட்டிருந்த ஐந்து வயது சிறுவனுக்கு, வாழ்க்கையையே மாற்றக்கூடிய அரிய வகை கிரானியோ சினாஸ்டோசிஸ் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளனர். பல மணி நேரம் நீடித்த இந்த சிக்கலான அறுவை சிகிச்சை, அச்சிறுவனின் தோற்றத்தை நேர்த்தியாக மாற்றியிருக்கிறது. அது மட்டுமன்றி அவனது உடலின் மிக முக்கிய செயல்பாடுகளையும் மேம்படுத்தி, ஆரோக்கியமான மற் றும் நம்பிக்கையான எதிர் காலத்திற்கான ஒரு புதிய வாய்ப்பை அச்சிறுவனுக்கு வழங்கியுள்ளது.

டாக்டர் மணிகண்டன் மற்றும் டாக்டர் ஜி. பாலமுரளி தலைமையிலான பல்வேறு துறைக ளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களது குழுவின் இந்த வெற்றி, சிக்கலான மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைகளில் காவேரி மருத்துவமனையின் மிகச் சிறப்பான திறன்களுக்கு எடுத்துக் காட்டாக திகழ்கிறது.

இது குறித்து ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின், முது நிலை மருத்துவரும் மற்றும் முக மற்றும் தாடை சீர மைப்பு அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் மணிகண்டன் கூறுகையில், “மண்டை ஓட்டு தையல் கள் முன்கூட்டியே இணைவதால் ஏற்படும் கடு மையான முக சிதைவு, மூக்கு மற்றும் கண் குழிகளில் உள்ள குறைபாடுகளை சரிசெய்வதே மேக்ஸில் லோஃபேஷியல் எனப்படும் மேல்தாடை-முக அறுவை சிகிச்சை நிபுணரின் பங்காக இருக்கிறது. பாதிப்பு அறிகுறிகள் தென்படும் ஆரம்ப நிலையிலேயே செய்யப்படும் சீரமைப்பு அறுவை சிகிச்சை ஒரு குழந்தையின் வாழ்க்கைப் போக்கையே முற்றிலும் மாற்றி மேம்பட்டதாக ஆக் கிவிடும்,” என்றார்.

ஆழ்வார் பேட்டை, காவேரி மருத்துவமனையின், முதுநிலை மருத்துவர் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலமுரளி கூறுகையில், “இந்த அறுவை சிகிச்சை களுக்கு தொடர்பு டைய உடல்நலப் பிரச்னைகளை பரி சோதித்து உறுதி செய்ய விரிவான மதிப்பாய்வு தேவைப்படுகிறது. பல மருத்துவ வல் லுநர்களின் ஒருங்கிணைந்த நிபுணத் துவத்துடன் மட்டுமே இந்த சீரமைப்பு சிகிச்சையில் சிறப்பான முடிவுகள் சாத் தியமாகும்,” என்றார்.
காவேரி குழும மருத்துவமனைகளின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், “காவேரி மருத்துவமனை, ஒத்துழைப்புமிக்க கூட்டு மருத்துவத்தின் சக்தியை இந்த சிகிச்சையின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித் துள்ளது” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img