fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் தாயுமானவர் திட்டம் துவக்கம்: முதியவர் வீட்டுக்கு நேரில் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கிய அமைச்சர்...

தூத்துக்குடியில் தாயுமானவர் திட்டம் துவக்கம்: முதியவர் வீட்டுக்கு நேரில் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கிய அமைச்சர் கீதாஜீவன்

வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர் களின் இல்லங்களுக்கே சென்று குடிமைப் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை கூட்டுறவுத்துறை சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்ததையடுத்து, தூத்துக்குடி- டூவிபுரம் பகுதியில் உள்ள சங்கரநாராயணன் பூங்கா அருகில் இருக்கும் நியாய விலைக் கடையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் வயது முதிர்ந்த நபருக்கு குடிமைப் பொருட்களை வழங்கியதுடன், குடிமைப் பொருட்களைக் கொண்டு செல்லும் தாயுமானவர் திட்ட வாகனத்தையும் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் ராஜேஷ், வட்டாட்சியர் முரளிதரன், வட்ட வழங்கல் அலுவலர் ஞானராஜ், கூட்டுறவுத்துறை சார் பதிவாளர் அந்தோணி பட்டுராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளர் ரவீந்திரன், வட்டச் செயலாளர் செந்தில்குமார், வட்டப் பிரதிநிதிகள் கார்த்தி கேயன், நாராயணராஜ், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், அண்ணா நகர் பகுதி அமைப்பு சாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img