fbpx
Homeபிற செய்திகள்தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய இளைஞர்கள் உச்சிமாநாட்டில் கோவை அம்ருதா பி.எச்.டி மாணவி பங்கேற்று அசத்தல்

தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய இளைஞர்கள் உச்சிமாநாட்டில் கோவை அம்ருதா பி.எச்.டி மாணவி பங்கேற்று அசத்தல்

அம்ருதா தர்சனம் – இன்டர்நேஷனல் சென்டர் ஃபார் ஸ்பிரிசுவல் அண்ட் கல்ச்சரல் ஸ்டடீஸின் பி.எச்.டி மாணவியான சீனா குண்ட்ரக்பாம், கடந்த வாரம் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற 6-வது இன்டர்நேஷனல் கான்ஃபரன்ஸ் ஆஃப் தி ஆசிய யூத் சம்மிட்டில் குளோபல் யூத் அம்பாசிடராக இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

“பசுமை வளர்ச்சி மற்றும் நிலையான தொழில்கள்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த உச்சிமாநாட்டில், உலகெங்கிலுமிருந்து வல்லுநர்களும் திறமையான இளைஞர் தலைவர்களும் நிலைத்தன்மை குறித்த முக்கியமான விவாதங்களில் ஈடுபட்டனர்.

சீனா, கார்பன் உமிழ்வு மற்றும் நிலையான தொழில் நடைமுறைகள் சார்ந்த விவாதங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தார்.

அவரின் நுண்ணறிவு மற்றும் வலுவான கருத்துக்கள் சர்வதேசப் பிரதிநிதிகளால் பரவலாகப் பாராட்டப்பட்டது.

நிலைத்தன்மை வளர்ச்சியின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் முக்கிய பங்கை அவரின் பங்கேற்பு எடுத்துக்காட்டியது.

படிக்க வேண்டும்

spot_img