இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் வருவாய்த் துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மைத் துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, கூட்டுறவு, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர்வசதி, வேலை வாய்ப்பு மற்றும் பொது நலன் குறித்த 277 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெற்றுக் குறைகளை கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் நேர்முக உதவியாளர் (பொது) ஏகாம்பரம் (பொறுப்பு), சமூக பாதுகாப்பு திட்டம் தனித் துணை ஆட்சியர் கீதாலட்சுமி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மீனா, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அறிவுடை நம்பி, நேர்முக உதவியாளர் (நிலம்) ரமேஷ் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



