சிவகாசி பெல் ஹோட்டல் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிட் யூட்டின் 15ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சிவகாசி பெல் ஹோட்டல் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிட்யூட்டின் சிவகாசி பெல் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. மாணவர்கள் மற்றும் கல்லூரி அதிகாரிகள் பேரணி யாக மேடைக்கு வருகை தந்தனர். பெல் மேட்ச் இயக்குனர் வைஜயந்தி வசந்த் ராஜசிங் இறைவணக்கத்துடன் துவங்கி வைத்தார். தமிழ் துறை விரிவுரையாளர் சங்கீதா வரவேற்புரை வழங்கினார். முதல்வர் பினா ராஜசிங் தலைமை விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார். விருதுநகர் மாவட்ட துணைக் கலெக்டர் டாக்டர் கே.எஸ்.சாய் பாலாஜி பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார். முதல்வர் டாக்டர் லியோ ராபர்ட் பட்டமளிப்பு நாள் உரையை நிகழ்த்தினார்
தங்கப்பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை தலைமை விருந்தினர் வழங்க, பட்டப்படிப்பு சான்றிதழ்களை இயக்குனர் விசித்ரா ராஜசிங் வழங்கினார். உணவு தயாரிப்பு துறை விரிவுரையாளர் தாமோதரன் நன்றி கூறினார்.



