fbpx
Homeபிற செய்திகள்உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம், வேளாண் நிறுவனத்திற்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம், வேளாண் நிறுவனத்திற்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் 1.06 லட்சம் சதுர பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளது. இம்மையத்தின் மூலம் பல் கலைக்கழகங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு இடையே புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவுசார் தொழில்நுட்பங் களை பரிமாற்றம் செய் வதற்கு வழி வகுக்கும்.

இதன் தொடக்கமாக, உயிரி தொழில்நுட்ப மகத் துவ மையம் சார்பாக தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மைய இயக்குனர் முனைவர் செந்தில் மற் றும் வேளாண் தொ ழில்நுட்ப நிறுவனமான வி.ஆர்.பூம் சார்ஜ் நிறு வனர் ந.மு.விசால் ஆதித்யா ஆகியோர்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் பொறுப்பு துணைவேந்தர் முனை வர் தமிழ்வேந்தன் முன் னிலையில் ஆராய்ச்சி மர பியல், மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

பூம் சார்ஜ் நிறுவனம் இத்துறையில் தனது பங்களிப்பை விரிவாக்கி, புதிய முயற்சியாக, மின்சாரம் மற்றும் சோலார் உதவியுடன் இயங்கக்கூடிய மினி டிராக்டர்கள், உழவோட்டும் கருவிகள் மற்றும் வேளாண் ட்ரோன்கள் போன்ற அதிநவீன கருவிகளை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு இப்புரிந் துணர்வு ஒப்பந்தம் வழி வகுக்கிறது.

இந்நிகழ்ச்சியில், தமிழ் நாடு வேளாண்மைப் பல் கலைக்கழக தாவர உயிரி தொழில் நுட்பத்துறை தலைவர் முனைவர் கோகிலாதேவி, பயிர் வினையியல் துறை தலை வர்மற்றும் பேராசிரியர் முனைவர் செந்தில் மற்றும் உயிரி தொழில்நுட்ப மகத்துவ மைய அலுவலர் கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img