fbpx
Homeபிற செய்திகள்குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: எம்ஜிஎம் ஹெல்த்கேர் சாதனை

குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: எம்ஜிஎம் ஹெல்த்கேர் சாதனை

கிரிக்லர்-நஜார் சி சிண்ட்ரோம் வகை 1 என்பது, ஒரு அரிதான மரபணு குறைபாடாகும். கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 8 கிலோ எடை கொண்ட, 5 மாதமே ஆன பச்சிளம் குழந்தைக்கு இப்பாதிப்பு கண்டறியப்பட்டது.

எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை, ‘குறைக்கப்பட்ட ஒற்றைப் பிரிவு உயிருள்ள கொடையாளர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச் சையை இக்குழந்தைக்கு வெற்றிகரமாகச் செய்துள்ளது. இந்தக் குறைபாட்டின் காரணமாக கல்லீரல் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன.

இக்குழந்தை கடுமையான மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், சுமார் 10 மணி நேரம் நீடித்த இந்த வெற்றிகர கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, குணமடைந்தது. இதைத்தொடர்ந்து சிகிச்சைக்குப் பிறகு 14 நாட்களில் இக்குழந்தை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு நலமுடன் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

கல்லீரல் நோய்கள், உறுப்புமாற்று சிகிச்சை – கல்லீரல், கணையம் மற்றும் பித்தப்பை (HPB) நோய்களுக்கான சிகிச்சை மையத்தின் இயக்குனர் டாக்டர் தியாகராஜன் சீனிவாசன் தலைமையில் இந்த வெற்றிகரமான அறுவைசிகிச்சை நடைபெற்றது.

இவருடன் மருத்துவ நிபுணர்களான டாக்டர் ஸ்ரீகாந்த் தும் மாலா மற்றும் டாக்டர் எல். சௌந்தர ராஜன் ஆகியோர் அறுவைசிகிச்சை குழுவில் இடம்பெற்றிருந்தனர். மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு குழுவில் டாக்டர் தினேஷ் பாபு மற்றும் டாக்டர் நிவாஷ் சந்திரசேகரன் ஆகியோர் முக்கியப் பங்காற்றினர்.

இந்த அறுவை சிகிச்சையின் சிக்கலான தன்மை குறித்துப் டாக்டர் தியாகராஜன் சீனிவாசன் பேசுகையில், “கல்லீரல் ஒட்டு மிக துல்லியமான அளவிற்கு பாதுகாப்புடன் குறைக்கப்பட்டது. தமனிகளின் இரத்த ஓட்டத்தைக் கவனமாகப் புனரமைத்து, மிகக் குறைந்த இரத்த இழப்புடன் இந்த பச்சிளம் குழந்தைக்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது,” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img