fbpx
Homeபிற செய்திகள்ஆண்டிபட்டியில் தமிழ்நாடு முட நீக்கியல் மருத்துவர் சங்கம் சார்பில் முதியோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆண்டிபட்டியில் தமிழ்நாடு முட நீக்கியல் மருத்துவர் சங்கம் சார்பில் முதியோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழகத்தில் எலும்பு மற்றும் எலும்பு மூட்டு வாரத்தை முதியோர்களின் ஆண்டாக அறிவித்து அவர்களுக்கு தமிழ்நாடு முட நீக்கியல் மருத்துவர் சங்கம் சார்பில் முதியோர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முடநீக்கியல் மருத்துவர் சங்கம் தேனி மாவட்ட நிர்வாகியும், தமிழ்நாடு மருத்துவர் சங்க தேனி மாவட்ட தலைவருமான ஜெய்கணேஷ் ஏற்பாட்டில் ஆண்டிபட்டி வைகை அணை சாலை பிரிவில் அமைந்துள்ள அவரது வாருணி ஆருத் மருத்துவமனையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ஏராளமான முதியோர்கள் பங்கேற்று பயன் பெற்ற இந்த முகாமில் எலும்பு மற்றும் எலும்பு மூட்டு வாரத்தை முதியோர்களுக்கு எலும்பு மற்றும் எலும்பு மூட்டுகளின் தேவைகள் அதன் பயன்பாடுகள் குறித்தும் விளக்கிக் கூறப்பட்டது.

மேலும் எலும்பு மற்றும் எலும்பு மூட்டுகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எவ்வாறு முதல் உதவி செய்வது உள்ளிட்ட சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சண்முக சுந்தரபுரத்தை சேர்ந்த திமுக தேனி தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் அய்யணன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

படிக்க வேண்டும்

spot_img