fbpx
Homeபிற செய்திகள்அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்: ரூ.3.06 கோடி மதிப்பீட்டில் 33 பணிகள்- கரூர் மாவட்ட...

அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்: ரூ.3.06 கோடி மதிப்பீட்டில் 33 பணிகள்- கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தகவல்

கரூர் மாவட்டம் குளித் தலை ஊராட்சி ஒன்றியம் இனுங்கூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் நேற்று (8ம் தேதி) செய்தியாளர் பயணத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்விற்குப் பின் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் செய்தியாளர்க ளிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக கிராமப்புறங்களை நகர்ப்புறத்திற்கு இணையாக உட்கட்டமைப்புகளை மேம்படுத்த பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக ஊரகப் பகுதிகளில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்துஇ முழுமையான சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சாலைகள், தெருவிளக்குகள் மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து சமூகத்தில் சமத்துவம் மேம்படும்.

அந்த வகையில் கரூர் மாவட்டத்திலுள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் 2023-2024ம் ஆண்டு 14 பணிகள் ரூ.1.49 கோடி மதிப்பீட்டிலும் 2024-2025ம் ஆண்டு 19 பணிகள் ரூ.1.57 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 33 பணிகள் ரூ.3.06 கோடி மதிப்பீட்டில் முடிவுற்றுள்ளது.

2025-2026ம் ஆண்டில் 18 பணிகள் ரூ.1.97 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைவாகவும் தரமாகவும் உரிய கால அளவிற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது உதவிஇயக்குநர் (ஊராட்சிகள்) சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆ.விஜய குமார், யு.சுந்தரபாண்டியன் மற்றும் செய்தியாளர்கள், தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img