தேனி மாவட்டம், ஆண்டிபட்டி திமுக மேற்கு, கிழக்கு ஒன்றியம் மற்றும் பேரூர் சார்பில் கலைஞர் கருணாநிதியின் 7வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் நகரில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் இருந்து மௌன ஊர்வலம் சென்று ஆண்டிபட்டி பஸ் நிலையத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் வைகை அணை சாலை பிரிவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இதில் பேரூர் செயலாளர் சரவணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செஞ்சுரி செல்வம்,மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரகாஷ், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சேது ராஜா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் சிவா, அர்ச்சுனன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜி.கே.பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான திமுக ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



