கோவை மாவட்டம், சூலூர் வட்டாரம், பீடம்பள்ளி கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச் சத்துகள் இயக்கம் திட்டத்தின் கீழ் சூலூர் வேளாண்மை விரிவாக்க மையத்திலிருந்து 30 கிலோ K12 சோள விதைகளை பெற்று 5 ஏக்கர் பரப்பில் சோளப் விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளதையும், இருகூரில் சொட்டுநீர் பாசனத் திட்டத்தின் கீழ் ரூ.98,720 மானியத்தில், ரூ.1,50,444 மதிப் பீட்டில் சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
இச்செய்தியாளர் பயணத்தின்போது மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக
உதவியாளர் (வேளாண்மை) ஆனந்த குமார் மற்றும் வேளாண் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வேளாண்மைத் துறை சார்பில், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச் சத்துகள் இயக்கம் திட்டத்தின் கீழ் பயறு வகை, சிறுதானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துகள் விதைகள் விநியோகம், செயல்விளக்கத்திடல் அமைத்தல், ஒருங்கிணைந்த ஊட்டச் சத்துகளில் இடுபொருட்கள் விநியோகம், பயிற்சிகள், மற்றும் அங்கக பொருட்கள் விநியோகம், உள்ளிட்டவை மூலம் ரூ.7.54 கோடி மதிப்பீட்டில் 21,541 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
மேலும் சொட்டுநீர் பாசனம் திட்டத்தின் கீழ் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனத் திற்கான சாதனங்களை அமைத்திட ரூ.45.08 கோடி வழங்கப்பட்டு 4,871 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் விவசாயிடம் இப்பண்ணையின் செயல்பாடு மற்றும் உற்பத்தி விவரங்கள் குறித்து கேட்டு அறிந்தார்.
அதற்கு, விவசாயி என்.கே.நடராஜன் இந்த விதைப் பண்ணையிலிருந்து ஏக்கருக்கு 1250 கிலோ முதல் 1500 கிலோ வரை மகசூல் கிடைப்பதாகவும், சோளம் விதைகளை வெளிச் சந்தையில் விற்பனை செய்தால் ஒரு கிலோவிற்கு ரூ.30 முதல் ரூ.40 வரைதான் கிடைக்கும்.
ஆனால் வேளாண் துறைக்கு விதையாக கொடுக்கும் போது சுமார் ஒரு கிலோவிற்கு விலை ரூ.60 வரை கிடைப்பதுடன், ஒரு கிலோவிற்கு ரூ.30 விதை உற்பத்தி ஊக்கத்தொகையாக கிடைப்பதால் கூடுதல் லாபம் கிடைக்கிறது.
அத்துடன் சோளத்தட்டுகள் கால் நடைகளுக்கு தீவனப்பயிராக இருப்பதால், அதனையும் விற்று கூடுதல் லாபம் அடைய முடிகிறது. மேலும், சொந்த கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தி கொள் ளவும் முடிகிறது என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, இருகூர் பகுதியை சேர்ந்த கே.சௌந்தரரா ஜன் சொட்டுநீர் பாசனத் திட் டத்தின் கீழ் ரூ.98,720 மானியத்தில், ரூ.1,50,444 மதிப்பீட்டில் காய்கறி பயிர்களுக்கு 0.9 ஹெக்டர் பரப்பில் சொட்டுநீர் பாசனம் அமைத்துள்ளார்.
அவரது தோட்டத்தில் அமைக்கப்பட் டுள்ள சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, விவசாயிடம் இத்திட்டத்தின் செயல்பாடு மற்றும் பயன்குறித்து கேட்டறிந்தார்.



