fbpx
Homeபிற செய்திகள்இந்தியா- இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம்: பிரதமருக்கு சைமா பாராட்டு

இந்தியா- இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம்: பிரதமருக்கு சைமா பாராட்டு

கடந்த 24ம் தேதி கையொப்பமான இந்தியா-இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கிவரும் ஜவுளித் தொழிலின் வளர்ச்சி இவ்விலக்கை அடைய மிக முக்கி யமாகும். எனவே, மத்திய அரசு தற்போதுள்ள வருட ஜவுளி வர்த்தகமான 172 பில்லியன் அமெரிக்க டாலரை 2047க்குள், 2040 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்திட இலக்கை நிர்ணயித்துள்ளது. இதில், வருட ஜவுளி ஏற்றுமதியை 37 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 600 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்திட இலக்கை நிர்ணயித் துள்ளது.

இந்நிலையில் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் சுந்தரராமன் பிரதமர் நரேந்திர மோடிக்கும், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ்சிங்குக்கும் இந்த வரலாற்றுமிக்க சாதனைக்காக சைமாவின் சார்பில் பாராட்டு தெரிவித்தார்.

இது குறித்து பத்திரிக்கை செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:
இந்த ஒப்பந்தத்தில் ஜவுளிப் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தற்போது 12 சதவீதம் வரை விதிக்கப்படும் வரிகளிலிருந்து விலக்கு பெற்று இருப்பதற்கு நன்றி. தற்போது இருந்து வரும் இரு நாடுகளின் 56 பில்லியன் அமெரிக்கன் டாலர் வர்த்தகத்தை 2030க்குள் இரண்டு மடங்காக உயர்த்திட இரு நாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் ஜவுளி ஏற்றுமதி, குறிப்பாக ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்களின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும்.
மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ள, தேசிய தொழில்நுட்ப ஜவுளி திட்டம், உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டம் மற்றும் பி.எம் மித்ரா ஜவுளி பூங்கா திட்டம் போன்றவைகள் மிகப் பெரிய முதலீடுகளை ஈர்ப்பதுடன் பல லட்சக்கணக்கான பேருக்கு வரும் ஆண்டுகளில் வேலைவாய்ப்பை விரைவாக ஏற்படுத்திட இந்தியா-இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் பெரிதும் உதவிடும்.

பருத்தி ஜவுளித் தொழிலில் உலகளவில் பெரும் பங்கினை வகித்து வரும் இந்தியா, சமீபத்தில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள பருத்தி உற்பத்தியினை அதிகரிக்கும் திட்டம் மேலும் வலிமைபடுத்தும்.


ஒட்டு மொத்த ஜவுளி வியாபாரத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கினை வகிக்கும் தமிழகத்தின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தாக இருக்கும். திருப்பூர், கரூர் போன்ற ஜவுளி நகரங்களின் ஏற்றுமதி வெகுவாக உயரும்.
சமையல் அறை உபயோக ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதிக்கு இந்த ஒப்பந்தம் பெரிதும் உதவும். மே 6ம் தேதி இந்தியா, இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டவுடனே ஏற்று மதிக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. தமிழக அரசு செயல்படுத்திவரும் தனித்துவம் மிக்க நிலையான ஜவுளிக் கொள்கைகளினால் பருத்தி மேம்பாடு, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் விருதுநகரில் வெகு விரைவில் தொடங்கவுள்ள பி.எம் மித்ரா ஜவுளி பூங்கா மற்றும் இதர திட்டங்களினாலும், தமிழகத் திலிருந்து இங்கிலாந்து உடனான ஜவுளித்துறை ஏற்றுமதியை மேலும் பலப்படுத்தி, தமிழக ஜவுளித் தொழில் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img