Homeபிற செய்திகள்‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் துவக்கம்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் துவக்கம்

புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் துவக்க விழா நடந்தது.

பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அமுதா வரவேற்றார்.

முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் முத்து பெருமாள் முகாமை துவக்கி வைத்து, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், பொது மக்களுக்கு மருந்து பெட்டகம் வழங்கினார்.

உதவி ஆணையர் கலால் சந்திரகுமார், தாசில்தார் அன்பழகன், தமிழ்ச்செல்வி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அமுதா முத்து பெருமாள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், குடிமை பொருள் (தனி) தாசில்தார் விக்டோரியா ராணி, மண்டல துணை தாசில்தார் பழனி, வருவாய் ஆய்வாளர் கங்கா தரன், மின்வாரிய அலுவலர் மகேஸ்வரி, வட்டார ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், வி.ஏ.ஓ.,க்கள் அலெக்சாண்டர், ராஜசேகர், வசந்தி, ஆனந்த், நேரு தாஸ், சிவராமன், வனிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img