கோவை கொங்குநாடு மருத்துவமனை சார்பாக பவர் ஹவுஸ் எதிரே, சிவானந்தா காலனி திருப்பத்தில் உள்ள கோவை மாநகர போக்கு வரத்து சிக்னலுக்கு தேவையான மின்னொளி விளக்குகள் மற்றும் அனைத்து உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இதனை கொங்குநாடு மருத்துவமனை நிர்வாக இயக்குனரும் தலைமை அறுவை சிகிச்சை நிபு ணரும் ஆகிய டாக்டர் பி.ராஜு அவர்கள் துவக்கி வைத்தார். அருகில் கொங்குநாடு மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் கார்த்திகேயன் ராஜு, போக்குவரத்து பிரிவு காவல் உதவி ஆய்வாளர்கள் ரஞ்சன், பசுவலிங்கம், போக்கு வரத்து தலைமை காவலர் சவுந்தர பாண்டியன், போக்குவரத்து சிக்னல் அமைப்பாளர் விக்னேஷ் மற்றும் கொங்குநாடு மருத் துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், நிர்வாகிகள் மற்றும் கொங்குநாடு அலைடு ஹெல்த் சயி ன்ஸ் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.



