fbpx
Homeபிற செய்திகள்சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியை மேம்படுத்த டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங் ராணுவக் கல்லூரி, கோவை அம்ருதா இடையே ஒப்பந்தம்

சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியை மேம்படுத்த டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங் ராணுவக் கல்லூரி, கோவை அம்ருதா இடையே ஒப்பந்தம்

இந்தியாவின் டிஜிட்டல் பாதுகாப்பு உருவாக்கத்தை வலுப்படுத்தும் ஒரு மைல்கல் முயற்சியாக, டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங் ராணுவக் கல்லூரி(MCTE), MHOW, கோவை அம்ருதா விஸ்வ வித்யாபீடத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

சைபர் பாதுகாப்பு மற்றும் தொடர்புடைய துறைகளில் சிறந்து விளங்கும் இந்தியாவின் முன்னணி பல்துறை நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த ஒப்பந்தம், முக்கியமாக சைபர் பாதுகாப்பில் அதிநவீன ஆராய்ச்சி, தொழில்நுட்ப உட்பொருத்தல் மற்றும் முக்கிய படைத்துறைத் தேவைகளுக்கான சிறப்புப் பயிற்சிகளை மையமாகக் கொண்டது.

இந்த கூட்டணி, அம்ருதாவின் கல்வி மற்றும் ஆராய்ச்சி வலிமையையும் MCTE -யின் செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப நிபுணத்து வத்தையும் இணைக்கிறது,
இந்த கூட்டுறவின் கீழ், ராணுவத்துறை இன்று சந்திக்கும் பிரச்சனை வரையறைகளுக்கு தீர்வு காணுதல், பயிற்சி தொகுதிகள், குறுகிய கால படிப்புகள் மற்றும் சான்றிதழ் திட்டங்களை இணைந்து உருவாக்குதல், ஆசிரியர் மற்றும் மாணவர் பரிமாற்ற முயற்சிகளைத் தொடங்குதல், எதிர்காலத் தேவைகளுக்கான முக்கியமான ஆராய்ச்சிகள் மற்றும் புதிய தொழில் நுட்பங்களை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை இரு நிறுவனங்களும் மேற்கொள்ளும்.


“MCTEயின் துணை கமாண்டன்ட் மற்றும் முதன்மை பயிற்சியாளர், மேஜர் ஜெனரல் கௌதம் மகாஜன், பேசுகையில் “இந்த ஒப்பந்தம் ஒரு முறைசார் ஒப்பந்தமாக இருப்பதைக் காட்டிலும் இது பலரது கூட்டு முயற்சி மற்றும் கண்ணோட்டத்தை ஒன்றிணைப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

அம்ருதா வின் ஆராய்ச்சி MCTE-யின் போர்க்கள சோதனை அனுபவமும் இணைந்து, படைத்துறைக்கு உறுதியான, நிகழ்நேர மற்றும் அளவிடக்கூடிய தீர்வுகளை உருவாக்க ஒரு தளத்தை உருவாக்குகிறது. இது இந்தியாவின் பாதுகாப்புத்துறைக்கு ஒரு பாதுகாப்பான, தொழில்நுட்பம் சார்ந்த எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு முக்கிய படியாகும், என்றார்.


அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் சார்பாக, பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டாக்டர் பி.அஜித்குமார் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, “இந்த கூட்டணி, புதுமை மூலம் தேசிய சேவைக்கான அம்ருதாவின் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்துகிறது” என்று குறிப்பிட்டார்.


அவர் தேசிய பாதுகாப்புக்கான அம்ருதாவின் உறுதியையும் வலியுறுத்தினார். அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் சைபர் பாதுகாப்பு TIFAC CORE இயக்குனர் பேராசிரியர் சேதுமாதவன் கூறியதாவது:


“MCTE-யுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், ஆராய்ச்சியை தாக்கமுள்ள பாதுகாப்புத் தீர்வுகளாக மாற்றுவது மட்டுமல்லாது இந்தியாவின் உலகளாவிய தொழில்நுட்ப தலைமைத் துவத்திற்கான பார்வைக்கு அது வழிவகுக்கிறது.

இது ராணுவம் மற்றும் கல்வி தொடர்பான ஒத்துழைப்பின் முன்னேற்றத்தைக் குறிப்பது மட்டுமல்லாது, தேசிய பாதுகாப்பு இலக்குகள், செயல்பாட்டு தேவைகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றுடன் கூடிய புதுமைகளை ஊக்குவிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

படிக்க வேண்டும்

spot_img