fbpx
Homeபிற செய்திகள்ஜி.கே.என்.எம் மருத்துவமனை நடத்திய நரம்பியல் கதிரியக்கவியல் நிபுணர்கள் கருத்தரங்கு

ஜி.கே.என்.எம் மருத்துவமனை நடத்திய நரம்பியல் கதிரியக்கவியல் நிபுணர்கள் கருத்தரங்கு

கோவை ஜி.கே.என்.எம் மருத்துவ மனை நடத்தும் இந்திய நரம்பியல் கதிரியக்கவியல் சங்கத்தின் கருத்தரங்கம் நடைபெற்றது. மருத்துவ சேவையில் முன்னணியில் திகழும் ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பில் இந்திய சங்கத்தின் 2 நாள் கருத்தரங்கம் கோவை தி ரெசிடென்சி டவர்ஸில் நடைபெற்றது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (ISRO) முன்னாள் இயக்குனர் பத்மஸ்ரீ டாக்டர்.மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர்.ரகுபதி வேலுசாமி முன்னிலை வகித்தார்.

இந்திய நரம்பியல் கதிரியக்கவியல் சங்கத்தின் தலைவர் டாக்டர்.மேத்யூ செரியன், செயலாளர் டாக்டர். அஜய் குமார் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் டாக்டர்.கே.நாகராஜன், செயலாளர் டாக்டர்.ராஸ்மிரஞ்சன் பதி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


அனைவரும் இணைந்து, பக்கவாதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான புத்தகத்தினை வெளியிட் டனர். மேலும் நியூரோஇமேஜிங், மேம்படுத் தப்பட்ட ஸ்ட்ரோக் இமேஜிங், இன்டர் வென்ஷனல் நியூரோரேடியாலஜி மற்றும் குழந்தைகளுக்கான நியூரோரேடியாலஜி ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்துதல் குறித்த தகவல்களை பரிமாறிக்கொள்ளுதல் மற்றும் நோயாளிகளுக்கு மிகச்சிறப்பான சிகிச்சைகளை அளிக்கும் வகையில் நவீன மருத்துவ வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு இக்கருத்தரங்கம் முக்கியத் துவம் அளிக்கிறது.


இக்கருத்தரங்கில் ஒருங்கிணைப்புக்குழு செயலாளர் டாக்டர்.ராஸ்மிரஞ்சன் பதி கூறியதாவது: நரம்பியல் கதிரியக்கவியல் நிபுணர்களின் இந்த கருத்தரங்கினை நடத்துவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.

இந்த கருத்தரங்கம் பக்கவாத நோய் சிகிச்சையில் புரட்சிகரமான ஆராய்ச்சிகளை முன்னிலைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நரம்பியல் கோளாறுகளை கண்டறிதல் மற்றும் அது சார்ந்த சிகிச்சை முறைகளையும் மேம்படுத்தும் வகையில் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img