fbpx
Homeபிற செய்திகள்இந்தியா விகேசியின் 23வது புதிய கிளை அரூரில் துவக்கம்

இந்தியா விகேசியின் 23வது புதிய கிளை அரூரில் துவக்கம்

இந்தியாவின் முன்னணி காலணி தயாரிப்பு நிறுவனமான இந்தியா விகேசி, தங்களது 23வது புதிய கிளையை அரூரில் துவங்கியுள்ளது. இது தமிழ்நாட்டில் 23வது மை விகேசி கடையாகவும், நகரத்தில் முதல் கடையாகவும் இருக்கும்.

இது இந்தியா முழுவதும் உள்ள சமூகங்களுக்கு தரம், ஸ்டைல் மற்றும் மலிவு விலையை கொண்டு சேர்ப்பதற்கான பிராண்டின் தொடர்ச்சியான முயற்சியில் ஒரு பெருமைமிக்க மைல்கல்லாகும்.

இந்தியாவின் வி கே சி இயக்குநர்கள் பிரேம்ராஜ் எம் ஏ மற்றும் சுபாஜ் சி பி ஆகியோர் இணைந்து கடையைத் திறந்து வைத்தனர். கடையின் உரிமையாளர் அஞ்சன் மற்றும் குடும்பத்தினர் இந்த பிரமாண்டமான திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அரூரில் உள்ள இந்தப் புதிய கடை ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாணிகளை உள்ளடக்கிய வி.கே.சி.யின் மிகவும் விரும்பப்படும் பிராண்டுகளான வி.கே.சி பிரைட், வி.கே.சி டெபான், குட்ஸ்பாட், ஈஸி, ஜா.மே.கா மற்றும் டெபோங்கோ ஆகியவற்றின் பரந்த தொகுப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

இந்நிகழ்ச்சியில் இந்தியா வி கே சியின் நிர்வாக இயக்குநர் வி கே சி ரசாக் பேசுகையில், மை விகேசியை அரூருக்குக் கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைகிறோம். இது தமிழ்நாட்டில் எங்களின் 23வது கடையாகும்.

ஒவ்வொரு புதிய விற்பனை நிலையத்திலும், நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சமகால ஃபேஷனை எடுத்துச் செல்லும் எங்கள் கனவை நோக்கி நாங்கள் தொடர்ந்து நகர்கிறோம்.” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img