fbpx
Homeபிற செய்திகள்மானிய விலையில் 15 மீனவர்களுக்கு பரிசல்கள்: கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வழங்கினார்

மானிய விலையில் 15 மீனவர்களுக்கு பரிசல்கள்: கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வழங்கினார்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீன்வளத்துறை சார்பில் மாநில நிதி- மானிய விலையில் மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 15 மீன வர்களுக்கு மானிய விலையில் பரிசல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர்ஜெய்லானி, ஆய்வாளர் பத்மஜா, சார் ஆய்வாளர் முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

2024–25ம் ஆண்டிற்கான மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு அமைச்சர் அறிவிப்பு எண் 17ன்படி, உள்நாட்டு மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வாங்குவதற்கு தமிழ்நாட்டில் ரூ.100 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மீன்பிடி உபகரணங்கள் வாங்குவதற்கு மொத்த செலவில் 50% மானிய உதவியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ், மானிய விலையில் மீனவர்களுக்கு பரிசல் வழங்கிட ஈரோடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள ஈரோடு மாவட்டத்திற்கு 30 பரிசல்களும், திருப்பூர் மாவட்டத்திற்கு 15 பரிசல்களும், மற்றும் கோவை மாவட்டத்திற்கு 15 பரிசல்களும், என மொத்தம் 60 எண்ணம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஒரு பரிசலின் மதிப்பு ரூ.18500 ஆகும். இதில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.


அதன்படி, கோவை மாவட்டத்தில் மீன்வளத் துறை சார்பில் மாநில நிதி மானிய விலையில் மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் பங்களிப்பு தொகையாக தலா ரூ.9250 செலுத்திய சிறுமுகை மீனவர் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த 4 மீனவர்களுக்கும், கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த 4 மீனவர்களுக்கும், மேட்டுப்பாளையம் மீனவர் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த 7 மீனவர்களுக்கும் என மொத்தம் 15 மீனவர்களுக்கு மானிய விலையில் பரிசல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img