கோவை மக்களின் 30 ஆண்டுகால கனவை நினைவாக்கிடும் வகையில் இரண்டாவது முழுமை திட்டத்தை (கோவை மாஸ்டர் பிளான் 2041) வெளியிட்டமைக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தேசியத் தலைவர் டாக்டர் ஹென்றி ஆலோசனையின் பேரில் தேசிய செயல் செயலாளர் லயன் ச.செந்தில்குமார் தலைமையில் நிர்வாகிகள் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமியை சந்தித்து நன்றி தெரிவித்து நினைவு பரிசு வழங்கினர். அப்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடனிருந்தார்.
தேசிய தேசிய துணைச் செயலாளர் பால சண்முகம் என்கின்ற கண்ணன், இணைச் செயலாளர் லயன் பாலசுப்பிரமணி, மாநில துணைத்தலைவர்கள் லயன் ராமநாதன், ஆர்கிடெக் முரளிதரன், மாவட்டத் தலைவர் லே-அவுட் ஓனர்ஸ் லயன் வில்சன் பி.தாமஸ், கோவை மண்டல தலைமை நிலைய செயலாளர் லயன் கிருஷ்ணமூர்த்தி, கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குருடம்பாளையம் முன்னாள் கவுன்சிலர் லயன் வளர்மதி, அய்யப்பன், சந்திரசேகர், லயன் கிரீஸ் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
இந்த தகவலை அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு செயல் செயலாளர் லயன் ச.செந்தில்குமார் தெரிவித்தார்.



