fbpx
Homeபிற செய்திகள்3,935 பணியிடங்களுக்கு 13 லட்சம் பேர் எழுதினர்: 3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள்...

3,935 பணியிடங்களுக்கு 13 லட்சம் பேர் எழுதினர்: 3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள் -டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தகவல்

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் குரூப் 4 நிலையில் காலியாக உள்ள 3,935 பணி இடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் இன்று காலை நடைபெற்றது. இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணி இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் இந்த தேர்வு எழுத மாநிலம் முழுவதும் 13 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

கோவை மாவட்டத்தில் இந்த தேர்வு எழுத 50,144 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் தேர்வு எழுத வசதியாக 100 க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

தேர்வர்கள் காப்பியடிப்பதை தடுக்க 175 தனி படைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இவர்கள் தவிர அறை கண்காணிப்பாளர் உள்பட 1000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை தூய மைக்கல் மேல்நிலை பள்ளியில் 300 பேர் தேர்வு எழுதினர். அதில் 7 மாத கைக் குழந்தையுடன் தேர்வு எழுத வந்த ராமநாதபுரம் சுங்கம் பகுதியைச் சேர்ந்த லீஜா குழந்தையை அவரது பெற்றோரிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுதச் சென்றார்.

இதற்கிடையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு 10,000 பேரும், நடப்பாண்டில் தற்போது வரை 11,000க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வு தமிழ்நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் 311 மையங்கள் உள்பட தமிழ்நாட்டில் 492 மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெறும். வரும் நாட்களில் 10,000 காலி பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெறும் என்று கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img