நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசின் அனைத்து துறை மாவட்ட உயர் அலுவலர் களுடன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்த மாவட்டத்தை சேர்ந்த அரசின் 31 துறைகள் சார்ந்த உயர் அலுவலர்களுடன் இணைந்து அனைத்து துறை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடத்தினார்.
அப்போது, நாமக்கல் மாவட்டத்தில் அரசு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிறைவடைந்த பணிகள், நடைபெற்று வரும் பணிகள், நிலுவையில் உள்ள பணிகளின் நிலை குறித்து ஆய்வு செய்தார். மேலும், ஒவ்வொரு துறை வாரியாக, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்டங்கள், குறித்தும் ஆய்வு செய்தார். தொடர்ந்து அரசின் திட்டப்பணிகளை குறித்த காலத்தில் செய்து முடித்து, நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடை யும் வகையில் ஒவ்வொரு துறையின் உயர் அலுவலர் களும் தங்கள் பணிகளை செவ்வனே செய்திட வேண்டும் என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாநில அமைச்சர்கள் மருத்துவர் மா. மதிவேந்தன், இராஜேந் திரன், பாராளுமன்ற உறுப்பி னர்கள் மாதேஸ்வரன், இராஜேஷ்குமார் சட்டமன்ற உறுப்பினர்கள் இராமலிங்கம், பொன்னு சாமி, நாமக்கல் மாவட்ட 31 அரசு துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



