fbpx
Homeபிற செய்திகள்கோவை ஏஐசி ரைஸ் - ரத்தினம் தொழில்நுட்ப கல்லூரி நடத்திய ‘ரைஸ் பிளஸ் 2025’ விழா

கோவை ஏஐசி ரைஸ் – ரத்தினம் தொழில்நுட்ப கல்லூரி நடத்திய ‘ரைஸ் பிளஸ் 2025’ விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள ஏஐசி ரைஸ் மற்றும் ரத்தினம் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து நடத்திய ரைஸ் பிளஸ் 2025 விழா, தமிழ்நாட்டின் மாணவர் நிறுவனர்கள் மற்றும் தொடக்க நிலை ஸ்டார்ட்அப்களுக்கு புதிய புதுமைகளை ஊக்குவிக்கும் ஒரு முக் கிய தளமாக அமைந்தது.


மேக் வவொர்க்ஸ் சென்டர் ஆஃப் எக்செலன்ஸ் எனும் நவீன வசதிகள் கொண்ட மேம்பட்ட புதிய மையத்தின் துவக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த மையம் மாணவர்களுக்கு கற்றல், டிசைன் திங்கிங் மற்றும் கண்டுபிடிப்பு சார்ந்த செயல்களை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்த நிகழ்வில், ஏஐசி ரைஸ்ன் இணைத் துணைத் தலைவர் பிரதீப் ராஜ் வரவேற்றுப் பேசினார். இதனைத் தொடர்ந்து இரத்தினம் குழுமத்தின் தலைவர் டாக்டர் மதன் செந்தில் தலைமையுரை நிகழ்த்தினார்.

அவர் பேசுகையில், எக்காலத்திலும் மாணவர்கள் எதிர் காலத்திற்குத் தயாராக இருக்க வேண்டிய தேவை குறித்தும், கல்வி பருவத்தில் மாணவர்களுக்கு ஆரம்ப கட்டத்திலேய புத்தாக்க மற்றும் தொழில் முனைவோர்கள் குறித்த விழிப்புணர்வு கிடைக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.


மேலும் இந்நிகழ்வில் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு – தலைமைச் செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குனருமான சிவராஜ் ராமநாதன் சிறப்பு விருந் தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் தன் உரையில் ஸ்டார்ட் அப் கலாச்சாரத்தின் வளர்ச்சி மற்றும் அதன் தேவைகள் குறித்தும் மாணவர்கள் அதில் பங்கேற்க வேண்டிய அவசியம் குறித்தும் உரையாற்றினார்.


இதனைத் தொடர்ந்து மாணவர் களுக்காக தொடங்கப்பட்டுள்ள இரு செயல்திட்டங்களின் அறிமுக விழா நடைபெற்றது. முதலாவதாக ஜீரோ டு பூட்கேம்ப் எனும் மாணவர்களாக உள்ள தொழில் முனைவோர்களுக்கு புதுமை யோச னைகள் மற்றும் பிஸினஸ் மாடல் உறுதிப்படுத்தலுக்கான கட்டமைக் கப்பட்ட பயிற்சி தொடங்கப் பட்டது.


இதனைத் தொடர்ந்து அறிவு பட்டை எனும் தொழில்நுட்ப பயிற்சிமுறை அடிப்படையிலான மாண்பை வளர்க்கும் நடை முறை கற்றல் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது. மேலும், இந்நிகழ்வில் ஏஐசி ரைஸி-ல் இருந்து அரசு நிதி பெற்ற தொழில் முனைவோர்களை கௌரவிக்கும் விழா நடைபெற்றது.

இதில் இ.டி.ஐ.ஐ.&ன் தமிழ்நாடு எனும் அரசின் முன்னெடுப்பில் இருந்து நிதியுதவி பெற்றவர்களுக்கு காசசோலை வழங்கப்பட்டது. மேலும் மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் ஹாக்கத்தான் 4.0ன் வெற்றியாளர்களான இரத்தினம் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகளுக்கு முறையே ரூ.8.5 லட்சம், ரூ.8.1 லட்சம் நிதிக்கான காசோலை வழங்கப்பட்டது.


மேலும் பல்வேறு தரநிலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இக்ககோ ஸ்பார்க் சேலஞ்ஜ் 2025ன் வெற்றியாளர்களுக்கு பரிசுத்தொகைக்கான காசோலை வழங் கப்பட்டது.


இறுதியாக, இன்குபேஷன் 2025 எனும் தொழில்முனை வோர்களுக்கான 8 மாத மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் புதிய ஸ்டார்ட் அப்களின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

படிக்க வேண்டும்

spot_img