திமுக சட்டத்துறை மாநில நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள சட்டத்துறை அலுவலகத்தில், சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ எம்.பி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சட்டத் துறை மாநில நிர்வாகிகள், கே.எஸ்.இரவிச்சந்திரன், கே.பச்சைப்பன், சு.இரா தாகிருட்டிணன், சூர்யா வெற்றிகொண்டான், சு.அருள்மொழி, பெ.இரகு, என்.மருதுகணேஷ், பொன்.சந்திரபோஸ், கே.மறைமலை, மீஞ்சூர்.கே. சுரேஷ், க.வீ.கணேஷ், கே.ஜெ.சரவணன், மதுரை கலாநிதி, சு.வை.சுரேஷ், ராஜா முகமது, தினேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் சட்டத்துறை இணைச்செயலாளர் கே எஸ் ரவிச்சந்திரன் சகோதரரும், முன்னாள் தொண்டர் படை நிர்வாகியும், கழகத்தின் மூத்த முன்னோடியுமான கே எஸ் அய்யாவு என்கிற கேஎஸ் ராமச்சந்திரன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சம்பந்தமாக அடிக்கடி கொண்டு வரும் பல்வேறு மாற்றங்களை அறிந்து அவற்றிற்கேற்ற வகையில் களப்பணியாற்றிட நமது வழக்கறிஞர் அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பகுதி ஒருங்கி ணைப்பாளர்கள் ஆகியோரின் ஆலோசனைகூட்டம் வருகின்ற 26.07.2025, அன்று காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடத் துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
வர இருக்கின்ற 2026 சட்டமன்ற தேர்தல் களப்பணியில் கழக வழக்கறிஞர்கள் தீவிரமாக பணியாற்றுவதற்கு ஏற்ற வகையில் மண்டலவாரியாக பயிற்சி கருத்தரங்குகள் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.



