கடலூர் அருகே ரெயில் விபத்தில் இறந்த மாணவர்களின் குடும்பத்துக்கு அமைச்சர்கள் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் ஆறுதல் கூறினர். தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினர்.
கடலூர் அருகே செம்மங் குப்பம் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது,தனியார் பள்ளிவேன் மீது ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாணவி சாருமதி, செழியன், நிமலேஷ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.
வேன் டிரைவர் உள்பட 3 பேர் காயமடைந்து கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் விபத்தில் உயிரிழந்த மாணவி சாருமதி,மாணவன் செழியன் ஆகியோர் இல்லத்திற்கு நேரில் சென்று, அவர்களது உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தியதோடு ,முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியின் மூலம் 2 குழந்தைகளுக்கும் தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கி பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
இது பற்றி அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் கூறியதாவது:-இந்த விபத்து பற்றி அறிந்ததும் தமிழ்நாடு முதல்-அமைச் சர் மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கவும், பலத்த காயம்டைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க உத்தர விட்டார்.
இதுபோன்ற ரெயில் விபத் துகளை தவிர்த்திடரெயில்வே துறையின் கட்டுப்பாட்டில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும். ரெயில்வே துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மாநில மொழியான தமிழ் தெரியாததால், பொதுமக்க ளுக்கு தகவல் தெரிவிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுவதால் தமிழ் தெரிந்த பணியாளர் களை பணி அமர்த்த வேண்டும்.
ஆகவே ஒருவரை ஒருவர் குறை கூறாமல் இதுபோன்று இனி வரும் காலங்களில் நிகழாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள மாவட்ட கலெக்டருக்கு முதல்-அமைச்சர். மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்க ளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி விரைவில் வீடு திரும்பும் வண்ணம் சிகிச்சை நல்ல முறையில் அளிக்கடாக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர்கள் தெரிவித்தனர்.
அப்போது மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எம்.எல்.ஏ.க்கள் அய்யப்பன், சபா.ராஜேந்திரன்,மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா,துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.



