பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் விருது வழங்கும் விழா மற்றும் பட்டமளிப்பு விழா கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனை கலையரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது.
பயன்பாட்டு கணிதம் மற்றும் கணக்கீட்டு அறிவியல் துறையின் தலைவர் ஷைனா ஷீன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் கே.பிரகாசன் பேசினார். பி.எஸ்.ஜி அண்ட் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு மற்றும் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
தலைமை விருந்தினராக, பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஆனந்த் தேஷ்பாண்டே பங்கேற்று சிறப்புரையாற்றினார். தொடர்ந்து அவர் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கினார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த 361 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.
கல்வி, நுண்கலைகள், பொதுப் பேச்சு மற்றும் மொழித் திறன்கள் போன்ற பன்முக செயல்பாடுகளில் சிறந்து விளங்குவதற்காக குஹப்ரியன் அறக்கட்டளையின் கீழ், மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் துறையின் முன்னாள் தலைவர் டாக்டர் பி.நவநீதனால் நிறுவப்பட்ட புகழ்பெற்ற பன்முகத்தாள்வார் விருது எம்.எஸ்.சி சைபர் செக்யூரிட்டி மாணவி அஸ்விகாவுக்கு வழங்கப்பட்டது.



