fbpx
Homeபிற செய்திகள்நாமக்கல் மாவட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் புதிய மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி...

நாமக்கல் மாவட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் புதிய மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி பேட்டி

நாமக்கல் மாவட்டத்தின் 17-வது ஆட்சித் தலைவராக துர்கா மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஜூன் 27 வெள்ளிக்கிழமை காலை பொறுப்பேற்றுக்கொண்டார். மாவட்ட மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல் படுவேன் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த திருமதி. மருத்துவர். ச.உமா பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, இம்மாவட்டத்திற்கு புதிய ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட துர்கா மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 17-வது புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னதாக, அவருக்கு அரசின் அனைத்து துறை அலுவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். இதனை அடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் துர்கா மூர்த்தி, அரசு கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். இதன் பின் னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து திட்டங்களையும் பொது மக்களுக்காக கொண்டு செல்ல பாடுப்படுவேன், அனைத்து அரசு அலுவலர்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இந்த மாவட்ட மக்கள் கடின உழைப்பாளிகள், உழைப்பால் உயர்ந்தவர்கள். இந்த மாவட்டத்தில், ஏற்கனவே மாவட்ட வருவாய் அலுவலராக இருந்தபோது மாவட்ட நிலவரம் குறித்து நன்கு அறிந்துள் ளேன். தற்போது, மாவட்ட ஆட்சிய ராக பொறுப்பேற்றுள்ளதால் மாவட்ட மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயலாற்ற முடியும். குடிநீர், மருத்துவம் உள் ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணி யாற்றுவேன்.
மக்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். நிச்சயமாக அனைத்து திட்டங்களை நிறை வேற்றுவேன். இவ்வாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img