கோவை மாவட்ட கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான அடைவு குறித்த ஆய்வு கூட்டம் இன்று கிக்கானிக் பள்ளியில் நடந்தது. கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால முரளி வரவேற்றார். மாவட்ட கலெக்டர் பவன் குமார் கிரியப்பனவர் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார். அதில் அவர் பேசியதாவது:
கோவை மாவட்டத்தில் 10 மற்றும் 12 வகுப்பு தேர்வுகளில் நல்ல தேர்ச்சியை பள்ளிகள் பெற்று உள்ளன. ஆனால் 11 ம் வகுப்பில், குறைந்து உள்ளது. 3, 5, 8 வகுப்பு மாணவ – மாணவிகளுக்கு நடந்த தேர்தலில் 3 ம் வகுப்பில் தேர்ச்சி குறைந்து உள்ளது. 5 ஆம் வகுப்பு சிறிது மேம்பட்டு உள்ள நிலையில் 8ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு அதைவிட சிறிது மேம்பட்டு உள்ளது.

பள்ளி தலைமை ஆசிரியர்கள் இதை சரி செய்து மேம்படுத்துவது குறித்து உடனே நடவடிக்கை எடுத்து இருப்பீர்கள். நமது மாநில அரசு பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளை விட சிறந்தவர்கள் வேறு எங்கும் இல்லை. கோவை மாவட்டத்தில் வால்பாறை, சுண்டக்காமுத்தூர், பொள்ளாச்சி பகுதி பள்ளிகள் தேர்ச்சியில் நன்றாக உள்ளது.
தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகள் சுமாராக உள்ளன. இவை அனைத்தையும் மேம்படுத்த வேண்டும். கோவை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையர், முதன்மை கல்வி அலுவலர் போன்ற அதிகாரிகள் இளைஞர்கள். அவர்களை அனுபவம் உள்ள நீங்கள் கோவை மாவட்டத்தில் மாணவ – மாணவிகளின் கல்வி திறன் வளர்ச்சி மேம்பட பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.

நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள், கோவை மாவட்ட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக கூட்டத்தில் பள்ளி மாணவர்கள் அனைத்து தேர்வுகளிலும் சிறப்பாக தேர்வு பெறுவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக 3, 5, 8 பள்ளி வகுப்பு மாணவர்கள் பாடங்களில் புரிதல் மற்றும் வாசிப்பு, எழுத்து ஆகியவை மேம்படுவது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.
இந்த வருடம் சிறப்பான தேர்வை கோவை மாவட்டம் பெறுவதற்கான நடவடிக்கையை மாவட்டம் மற்றும் வட்டார கல்வி அளவில் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.



