விண்வெளி தொழில் நுட்பத்தை தேச நலனுக்காக இந்தியா தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது என்று கொங்கு நாடு கலை-அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கிரண்குமார் பேசினார்.
கோவை மாவட்டம் உடையாம்பாளையம் சாலையில் உள்ள கொங்கு நாடு கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் 18-வது பட்டமளிப்பு விழா இன்று (ஜூன் 28) கல்லூரி வளாகத்தில் உள்ள மாரப்பா ஜி.ஆறுச்சாமி ஆடிட்டோரியத்தில் நடை பெற்றது.
இவ்விழாவில், இஸ்ரோ முன்னாள் தலைவரும் ஸ்பேஸ் கமிஷன் உறுப்பின ருமான ஏ.எஸ்.கிரண் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தலைமை வகித்த கல் லூரியின் செயலாளரும் இயக்குனருமான டாக்டர் சி.ஏ.வாசுகி தனது உரையில், விண்வெளி தொழில்நுட்பத்தில் இஸ் ரோ நிகழ்த்தி வரும் சாதனைகள் குறித்து எடுத் துரைத்தார். அதனைத் தொடர்ந்து, மாணவர் களின் முன்னேற்றத்தில் ஆசிரியர்களின் பங்கு மற்றும் நாட்டின் முன் னேற்றத்தில் மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய கல்லூரியின் முதல் வர் டாக்டர் வி.சங் கீதா தனது உரையில், கல்லூரியின் தோற்றம் மற்றும் முன்னேற்றம் குறித்து விளக்கினார். கடந்த கல்வியாண்டில் மாணவர்கள் நிகழ்த்திய வியத்தகு சாதனைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
சிறப்புரையாற்றிய இஸ்ரோ முன்னாள் தலைவரும் ஸ்பேஸ் கமிஷன் உறுப்பினருமான ஏ.எஸ்.கிரண் குமார் பேசும்போது, தொலைத்தொடர்பு, வானிலை மாற்றம், ஒளிபரப்பு உள்ளிட்டவற் றில் செயற்கைக்கோள்களின் பங்கு குறித்தும் விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த விக்ரம் சாரா பாயின் சாதனைகள் குறித் தும் எடுத்துரைத்தார். தற் போதைய சூழலில் நாம் இருக்கின்ற இடத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும் அதற்கு அருகில் இருக்கும் இடங்கள் குறித்து அறிந்து கொள்ளவும் தொழில் நுட்பம் உதவிகரமாக இருக் கிறது என்றும் குறிப்பாக மீனவர்களுக்கு இந்த தொழில்நுட்ப வசதி மிகவும் உதவியாக இருக்கிறது என் றும் கூறினார்.
புயல் வருகை மற்றும் அதன் தன்மை குறித்து அறிந்து கொள்ள செயற்கைக்கோள்கள் மிகவும் உதவுகிறது என் றும் இதனால் உயிர் இழப்புகள் மிகுதியாக குறைந்துள்ளது என்றும் கூறினார். விண்வெளி தொழில்நுட்பத்தை தேச நலனுக்காக இந்தியா தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது என்றும் கூறி னார். தொடர்ந்து பேசிய அவர், செவ்வாய் கிரகம் மற்றும் நிலவில் இந்திய விண்கலங்கள் நிகழ்த்தியுள்ள வியத்தகு சாதனைகள் குறித்து எடுத் துரைத்தார். விண் வெளி தொழில்நுட்பத்தில இந்தியா மேற்கொண்டுவரும் நடவ டிக்கைகள் குறித்தும் எடுத் துரைத்தார்.
நிறைவாக மாணவர்கள் தங்களது திறனை மேம் படுத்திக் கொள்ளும் வகையில் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று கூறி மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித் தார். அதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு பட் டமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த பட் டமளிப்பு விழாவில், 834 யூ ஜி மாணவர்கள் 211 பிஜி மாணவர்கள் என மொத்தம் 1057 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க வகையில் 12 மாணவர்கள் பல்கலைக்கழக அளவில் முதன்மை இடங்களை பெற்றுள்ளனர்.



