fbpx
Homeபிற செய்திகள்இந்துஸ்தான் அறிவியல் -வணிகவியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா

இந்துஸ்தான் அறிவியல் -வணிகவியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா

இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் கவிஞர் கவிதாசன் சிறப்புரையாற்றினார். மேலும் கல்லூரி செயலர் பிரியா, யமுனா மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கவிதாசன் பேசுகையில், பெற்றோர் நிலை மற்றும் மாணவர்களின் எண்ணப்போக்கு சார்ந்து மிகச் சிறப்பாக கருத்துகளை எடுத்துரைத்தார். பிற்பகல் பெற்றோர்களுக்கான சிறப்பு உளவியல் சார்ந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கோவையைச் சார்ந்த சமூக ஆர்வலர் உளவியல் நிபுணர் முனைவர் ஆக்னஸ் ஃபெபியோலா கலந்துகொண்டு இன்றைய சூழலில் இளைஞர்களை கையாளும் விதம் குறித்து மிகச்சிறப்பாக எடுத்துரைத்தார். மேலும் பெற்றோரிடம் கலந்துரையாடி சந்தேகங்களை நிவர்த்தி செய்தார். இதில் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பேராசிரியர்கள் என 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img