fbpx
Homeபிற செய்திகள்போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்பு

போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்பு

சமுதாயத்தில் போதைப் பொருட்களின் பயன்பாடு விதவிதமாக அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், பள்ளி கல்லூரி மாணவர்களி டமும் போதை பொருள் பழக்கம் இருப்பது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றன. இதனை தடுக்கவும், போதைப் பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல் லூரியின் நாட்டுநலப் பணித்திட்டம், போதைப்பொருள் தடுப்புக்குழு, யங் இண்டியன்ஸ் இணைந்து மாநகர காவல்துறை முன்னிலை யில் விழிப்புணர்வு ஏற் படுத்தினர்.

கல்லூரியின் மைதானத்தில் 5 ஆயிரம் மாணவ மாணவி கள் ஒன்றிணைந்து “No Drugs” போதைப் பொருள் தடுப்பு உறுதி மொழி ஏற்றனர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவி யல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனை வர் பி.எல்.சிவக்குமார் தலைமை தாங்கினார்.

மதுவிலக்குப்பிரிவு காவல் ஆய்வாளர் சரவணன், யுவா கிளப் பிரதிநிதிகள், நாட்டுநலத்திட்ட ஒருங் கிணைப்பாளர்கள், போதைப்பொருள் தடுப்புக்குழு ஒருங்கி ணைப்பாளர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், 5000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போ தைப்பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img