fbpx
Homeபிற செய்திகள்கோவை விமான நிலையத்தில் இரண்டு பயணிகளிடம் 35 ட்ரோன்கள் பறிமுதல்

கோவை விமான நிலையத்தில் இரண்டு பயணிகளிடம் 35 ட்ரோன்கள் பறிமுதல்

கோவை, பீளமேட்டில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு இருந்து சென்னை, பெங்களூர், மும்பை, கொல்கத்தா, சீரடி, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் சார்ஜா, சிங்கப்பூர், அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பயணிகளின் உடமைகள் மத்திய தொழில் பாதுகாப்பு துறை அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து விமானம் ஒன்று நேற்று இரவு கோவை விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணி களின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் நவீன ஸ்கேன் எந்திரத்தின் உதவியுடன் சோதனை செய்தனர்.

அப்பொழுது அதில் இரண்டு பயணிகளின் உடைமைகளை சோதனை செய்த போது அதற்குள் உரிய ஆவணங்கள் இன்றி நவீன ரக ட்ரோன்கள் இருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து ட்ரோன்களை கொண்டு வந்த இரண்டு பயணிகளை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கொண்டு வந்த பைகளில் 35 ட்ரோன்கள் இருப்பதும், இதன் மதிப்பு ரூபாய் 35 லட்சம் இருக்கும் என்பதும் தெரிய வந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் சங்கர் குரு சுப்ரமணியம் மற்றும் ஜாகீர் ஹூசியான் என்பதும் சீனா தயாரிப்பான ட்ரோன் பேட்டரிகள் கொண்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆவணங்கள் இன்றி எப்படி கொண்டு வரப்பட்டது குறித்து பயணிகள் இரண்டு பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 21 – ஆம் தேதி சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் திருச்சியை சேர்ந்த பயணி ஒருவரின் உடமையில் இருந்த 17 உயர் ரக செல்ஃபோன்கள் அதிகாரிகள் பிடிக்காமல் கோட்டை விட்டனர். அதை விமான நிலையத்தின் வெளியே இருந்த பீளமேடு காவல்துறையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு கண்டுபிடித்து பின்னர் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தது குறிப்பிடத் தக்கது. இதனை தொடர்ந்து தான் தற்பொழுது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ட்ரோன்களை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக செயல்பட்டு பிடித்தது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img